Saturday, August 25, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கோண்டாவில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து ஏறத்தாழ 3.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரை யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி ஆகிய இரு வீதிகளுமே ஊடறுத்துச் செல்கின்றன. இவ்வூருக்கு தெற்கு எல்லையில் கொக்குவில், திருநெல்வேலி ஆகிய ஊர்களும், வடக்கில் இணுவில், உரும்பிராய் என்னும் ஊர்களும் உள்ளன. கிழக்குத் திசையில் இருபாலை அமைந்துள்ளது.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபகுதிக்கான தலைமைச் செயலகம் இவ்வூரில் பலாலி வீதியில் அமைந்துள்ளது.


பொருளடக்கம்


நிர்வாகப் பிரிவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள கோண்டாவில் பின்வரும் 6 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
  1. கோண்டாவில் வட மேற்கு
  2. கோண்டாவில் தென் மேற்கு
  3. கோண்டாவில் மத்தி மேற்கு
  4. கோண்டாவில் மத்தி கிழக்கு
  5. கோண்டாவில் வட கிழக்கு
  6. கோண்டாவில் தென் கிழக்கு







      

Friday, August 24, 2012

கோண்டாவில் வரைபடம்

கோண்டாவிலை சூழவுள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஓர் புவியியற் சான்று.



 இங்கு காணப்படும் புகையிரத நிலையம், பாடசாலை,ஆலயங்கள்,கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் அனைத்தும் இங்கு கல்விமான்களும், அறிஞர்களும் உள்ளனர் என்பதைக் கூறுகின்றன.

         அத்துடன் இங்கு காணப்படும் வயல்களும் தொழில் நிறுவனங்களும் நல்ல தொழிலாளர்கள் இருப்பதனை சுட்டிக்காட்டுகின்றன.

Wednesday, August 22, 2012

கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மகாகணபதி பிள்ளையார் கோவில் (காளி கோவில்) 2012 முதல் இரண்டு நாள் திருவிழா

கொடியேற்றம்









22/08/2012 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி காலை மாலை திருவிழாக்கள் இடம் பெறும் என்பதனை பக்த அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.  


அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரப்
பாடல் -01



ஜெயஜெய துர்கதி நாஷினி காமினி
ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே
ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
.
துர்கதி மாற்றி அருள்பவளே
            திரு மாலவன் காதலில் கனிந்தவளே
கேட்டவை எல்லாம் கொடுப்பவளே
            நல்ல சாத்திரங்களின் வடிவானவளே
ரதகஜ துரக பதாதிகள் சூழ்ந்திட
            திகழ்ந்திடும் பாற்கடல் நாயகியே
அண்ட சராசர உயிர்கள் அனைத்துமே
            அன்புடன் பணிந்திடும் தேவதையே
அரியுடன் பிரம்மனும் அரனுடன் தேவரும்
            அடி பணிந்தேற்றிடும் அன்னையளே
தாபங்கள் அனைத்தையும் நீக்கியே காத்திடும்
            தாமரைப் பாதங்கள் கொண்டவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை கஜ லக்ஷ்மியே காத்தருள்வாய்! 


ஓம் சாந்தி ஓம்

அன்னை காளிகாம்பாளும் அப்பன் மகாகணபதியும் -01